அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் எங்கெங்கு மழை?.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai Regional Meteorological Center Weather Update

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வட உள் கர்நாடகாவிலிருந்து தென் தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, 22 ஆம் தேதி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

23 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதியை பொருத்தவரையில், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 ஆம் தேதி பொருத்தவரையில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

chennai

26 ஆம் தேதியை பொருத்தவரையில் தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஒருசில மாவட்டங்கள், புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.