குடும்ப பிரச்சனையால் விபரீதம்.. பெண் எடுத்த முடிவால் குடும்பத்தினர் கண்ணீர்.!

குடும்ப பிரச்சனையால் விபரீதம்.. பெண் எடுத்த முடிவால் குடும்பத்தினர் கண்ணீர்.!


Chennai Ramapuram Woman Suicide due to Family Problem

சென்னையில் உள்ள ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் விநோதன் (வயது 52). இவர் ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில், காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி தீபா (வயது 48). தம்பதிகளுக்கு விஜய் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் விஜய் தனது தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வருகையில், வீட்டின் படுக்கை அறை கதவு தாழிடப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, தீபா குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.  

chennai

இந்த விஷயம் தொடர்பாக ராயலா நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தீபா கடந்த சில நாட்களாகவே குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.