சென்னை: சிறுமி 4 பேரால் போதைக்கு அடிமையாக்கி சீரழிக்கப்பட்ட விவகாரம்.. 3 பெண்களுக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!
ராமாபுரம் அருகே பானிபூரி சாப்பிட சென்ற பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், 3 கல்லூரி மாணவிகளை தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள ராமாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த பானிபூரி கடைக்கு, பானிபூரி சாப்பிட சென்ற 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த் ஹரிஷ், சினிமா உதவி இயக்குனர் சதீஷ்குமார், கல்லூரி மாணவர் விஷால், தனியார் கல்லூரி பேராசிரியர் பிரசன்னா ஆகிய 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், 8 ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவிக்கு, போதைப்பொருளை பழக்கப்படுத்தி கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும், சில நேரங்களில் தனித்தனியே தங்களுடன் வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறியதும் அம்பலமானது. நள்ளிரவு நேரத்தில் மாணவியின் வீட்டிற்கு, அவரை எப்படி அழைத்து வந்தார்கள்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது பேரதிர்ச்சி தகவல் காத்திருந்துள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவரான வசந்த் ஹரிஷ், தன்னுடன் பயின்று வந்த மாணவி ஒருவருக்கும், அவரின் 2 தோழிகளுக்கும் பல கதைகள் சொல்லி போதைப்பழக்கத்தை கற்றுக்கொடுத்துள்ளார். இந்த போதைக்கு மயங்கிய 3 தோழிகளை வைத்து, சிறுமியை அவரின் வீட்டிற்கே சென்று நள்ளிரவில் அழைத்து வந்து அத்துமீறலில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் 4 கொடூரர்கள் கைதாகிவிட, சுதாரித்த 3 பெண்களும் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளனர். இவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர்களின் மீதும் போக்ஸோ சட்டம் பாய்ச்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.