அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
BREAKING: பிரதீப் படுகொலையால் சென்னையில் பதற்றம்..! விடிய விடிய போலீஸ் நடத்திய வேட்டையில் 100 பேர் கைது..! சென்னையில் பெரும் பரபரப்பு..!!!
திரைப்பட துணை நடிகர் பிரதீப் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மாநகர காவல்துறையினர் விடிய விடிய அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முழுவதும் விடிய விடிய தேடுதல்
பிரதீப் கொலைக்குப் பிறகு குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்காமல் தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். குறிப்பாக ரவுடிகள், பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
இதையும் படிங்க: பண்டிகைக்கு முன்பே வங்கி கணக்கில் வரவு! மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வந்துடுச்சு... உடனே செக் பண்ணுங்க...!!!
100-க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது
இதன் ஒரு பகுதியாக மாநகரின் பல்வேறு இடங்களில் ஒரே இரவில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி மற்றும் குற்றத் தொடர்புகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உயர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சட்டம்-ஒழுங்கு நிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே பயணத்தில் ஒட்டுமொத்தமாக அள்ளும் 8,400 கோடி.....! முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளானில் புதிய வேலை வாய்ப்புகள்...!!!