அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
கலிகாலம்! கூடுதல் வகுப்பு என்ற பெயரில் மாணவியுடன் தனி அறையில்... கணினி ஆசிரியர் அடித்த கூத்து! கையும் களவுமாக பிடித்து வெளுத்த அண்ணன்... அதிர்ச்சி வீடியோ!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், கூடுதல் வகுப்பு எடுப்பதாகக் கூறி மாணவியுடன் தனியாக இருந்த கணினி ஆசிரியர் அத்துமீறி முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதை நேரில் பார்த்த மாணவியின் சகோதரரும் அவரது நண்பர்களும் ஆசிரியரை கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் அவரிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஆசிரியர் தாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.
கூடுதல் வகுப்பு என்ற பெயரில் தனி அறையில் மாணவி
வகுப்புகள் முடிந்த பிறகும் மாணவி ஆசிரியருடன் தனி அறையில் இருந்துள்ளார். வெளியே காத்திருந்த அவரது சகோதரரும் நண்பர்களும் அறைக்குள் சென்றபோது, ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறி முத்தமிட்டதாகக் கூறப்படும் காட்சியை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரரும் நண்பர்களும் ஆசிரியரை சரமாரியாகக் கன்னத்தில் அறைந்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர் தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றார்.
‘சகோதரி போன்றவர்’ என ஆசிரியர் விளக்கம்
மாணவியின் சகோதரர், வகுப்புகள் முடிந்த பிறகும் மாணவியுடன் அறைக்குள் தனியாக என்ன செய்து கொண்டிருந்தாய் என கோபமாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆசிரியர், மாணவியை தனது சொந்த சகோதரியைப் போல கருதுவதாகவும், ரக்ஷா பந்தன் நாளில் அவர் தனக்கு ராக்கி கட்டியதாகவும் கூறினார். கணினி ஆசிரியர், மாணவி கூடுதல் படிப்புக்காக மட்டுமே அங்கு தங்கியிருந்ததாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஆசிரியரிடம் மாணவியின் சகோதரரும் நண்பர்களும் நடத்திய விசாரணை மற்றும் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோரக்பூர் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை.
இதையும் படிங்க: பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! திருமணமான 3 மாதங்களில் மனைவியின் மாஸ்டர் பிளான்..... பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!