மனைவியை கொன்று சாக்குமூட்டையில் வைத்த கணவன்., தாயின் சடலம் தெரியாமல் கேம் விளையாடிய சோகம்.!

மனைவியை கொன்று சாக்குமூட்டையில் வைத்த கணவன்., தாயின் சடலம் தெரியாமல் கேம் விளையாடிய சோகம்.!


chennai-ottery-man-murder-wife

சென்னையில் உள்ள ஓட்டேரி, ஏகாந்திபுரம் நான்காவது தெருவை சார்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி வாணி (வயது 41). வாணி சென்ட்ரல் அருகேயுள்ள வால்டாக்ஸ் சாலையில் வீட்டு வேலை செய்து வருகிறார். 

கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினமும் வாணியுடன் ரமேஷ் தகராறு செய்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க, வாணியை  ரமேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

chennai

பின்னர், மனைவியின் கை-கால்களை கட்டி உடலை மூட்டையாக கட்டி, அதனை வீட்டின் மேஜைக்கு கீழே தள்ளி வைத்துள்ளார். மனைவியை கொலை செய்வதற்கு முன்னதாக தனது மகன்கள் கவுதம் (வயது 15), ஹரிஷ் (வயது 12) ஆகியோரை திட்டமிட்டு மாமியாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

மனைவியை கொலை செய்ததும் ரமேஷ் தலைமறைவான நிலையில், பாட்டி வீட்டிற்கு சென்ற ரமேஷின் பிள்ளைகள் நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் தாய் கொலை செய்யப்பட்டு பிணம் உள்ளது கூட தெரியாமல், இருவரும் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். 

chennai

பின்னர், இரவிலும் வீட்டில் தங்கிய நிலையில், அதிகாலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை அக்கம் பக்கத்தினர் அறிந்துள்ளனர். துர்நாற்றம் குறித்து வீட்டில் சென்று விசாரித்து, மேஜைக்கு அடியில் உள்ள மூட்டையை திறந்து பார்க்கையில் வாணி கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பதை கண்டுள்ளனர். 

இதுதொடர்பாக ஓட்டேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வாணியின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், ரமேஷ் தலைமறைவாகியிருந்தது உறுதியானதால், அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.