பூட்டிய அறைக்குள் இறந்துகிடந்த மருத்துவக்கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை.! பரிசோதனை முடிவுகள் வெளியீடு.!

பூட்டிய அறைக்குள் இறந்துகிடந்த மருத்துவக்கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை.! பரிசோதனை முடிவுகள் வெளியீடு.!


chennai-medical-college-student-dead-corono-test-negati

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் பணியாற்றிய இறுதியாண்டு மருத்துவ மாணவி இன்று மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி கொரோனா சிறப்பு பிரிவில்  நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். கொரோனா வார்டில் பணியாற்றுவதால் வீட்டிற்கு செல்ல அனுமதி இல்லாததால் பிரதீபா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தனியாக தங்கியுள்ளார்.

corono

இந்நிலையில், வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக ப்ரதீபாவின் தோழி அவரது அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் பிரதீபா கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரதீபா மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து பிரதீபாவை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூற, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரதீபா கொரோனா வார்டில் பணியாற்றியதால் ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரதீபாவின் சளி மாதிரியை பரிசோதித்ததில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகே பிரதீபா இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.