#Breaking: வங்கக்கடல் பகுதியில் புயல்?... 5 மாவட்டங்களுக்கு மிககனமழை எச்சரிக்கை..! 

#Breaking: வங்கக்கடல் பகுதியில் புயல்?... 5 மாவட்டங்களுக்கு மிககனமழை எச்சரிக்கை..! 


Chennai IMD Announce Heavy Rain 5 Districts

இன்று விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மதுரை, நெல்லை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யலாம். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யலாம். சென்னையில் வரும் 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யும். 30 ஆம் தேதிக்கு பின்னர் மழை பொழிவு குறையும். 

weather update

அதனைத்தொடர்ந்து, 3 ஆம் தேதிக்கு மேல் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் மழை பொழிவை தரும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. 

இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்குமா? அல்லது ஆந்திர கடலோர பகுதிகளில் கடக்குமா? என்பது பின்னரும் நாட்களில் தெரியவரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.