11 வயது சிறுவன் பலாத்காரம் - தலைமைக்காவலர் பகீர் செயல்.. சென்னை சிறுவனின் தரமான சம்பவம்.!



Chennai Horror: Head Constable Arrested for Assaulting 11-Year-Old Boy After Brave Escape

தன்னிடம் அத்துமீறிய தலைமை காவலரை 11 வயது சிறுவன் சிறையில் அடைத்த சம்பவம் நடந்துள்ளது. 

தலைமை காவலர்:

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன், தனது உறவினர் வீட்டுக்கு கோடை விடுமுறைக்காக சென்றுள்ளார். இவரின் வீட்டருகே உறவினரின் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: கட்டுமான வேலையில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. 2வது மாடியில் காத்திருந்த எமன்.. தந்தை கண்முன் சோகம்.!

அத்துமீறல்:

இதனிடையே, சம்பவத்தன்று சிறுவனுக்கு ஜூஸில் மதுவை கலந்து கொடுத்த தலைமை காவலர், சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தலைமை காவலரின் பிடியில் இருந்து தப்பிய சிறுவன், அவரை ரிமோட்டால் தாக்கிவிட்டு நேரடியாக காவல் நிலையத்துச் சென்று புகார் அளித்துள்ளார்.

chennai

அதிரடி கைது:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அசோக் நகர் காவல் துறையினர், தலைமை காவலரான வேலப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று இரவு 11:30 மணியளவில் இந்த விஷயம் நடந்த நிலையில், சிறுவன் தலைமை காவலரை அறையில் வைத்து பூட்டி விட்டு காவல் நிலையம் சென்றுள்ளார். 

இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!