ஆடை இல்லாமல் வீடியோ காலில் வா..! அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி... அத்துமீறிய அந்தரங்க லீலை...! ஜிம் மாஸ்டரின் டார்ச்சலால் மாணவி எடுத்த அதிரடி முடிவு..!!!
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை ஆபாசப் புகைப்படங்களை காட்டி மிரட்டியதாக ஜிம் பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பின், குற்றஞ்சாட்டப்பட்ட இம்தியாஸ் ஷெரிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜிம்மில் ஏற்பட்ட பழக்கம்
ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, அங்குள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பயிற்சி பெறச் சேர்ந்துள்ளார். அப்போது அங்கு பயிற்சியாளராக இருந்த இம்தியாஸ் ஷெரிப்புடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில், மாணவி என்ன ஆடை அணிய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களில் இம்தியாஸ் தொடர்ந்து கட்டுப்பாடு விதித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணி உள்ளிட்ட 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!!
இதனால் அதிருப்தியடைந்த மாணவி, அவருடன் பேசுவதையும் பழகுவதையும் படிப்படியாக தவிர்த்துள்ளார். தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இம்தியாஸ், மீண்டும் பேச வேண்டும் என்றும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி மிரட்டியதாக போலீசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.
வீடியோ காலில் மிரட்டியதாக புகார்
ஒரு கட்டத்தில் மாணவியை கட்டாயப்படுத்தி வீடியோ காலில் வரவழைத்த இம்தியாஸ், ஆடைகளின்றி தோன்றச் செய்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் புகைப்படங்களை காட்டி, தன்னுடன் தனிமையில் வர வேண்டும் என தொடர்ந்து மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீசார் நடவடிக்கை
தொடர்ந்த மிரட்டலால் பாதிக்கப்பட்ட மாணவி, சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் ஜிம் பயிற்சியாளர் இம்தியாஸ் ஷெரிப் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: BREAKING: பிரதீப் படுகொலையால் சென்னையில் பதற்றம்..! விடிய விடிய போலீஸ் நடத்திய வேட்டையில் 100 பேர் கைது..! சென்னையில் பெரும் பரபரப்பு..!!!