BREAKING: போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணி உள்ளிட்ட 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!!



gem-granites-owner-goondas-act

போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர். வீரமணி உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. வீரமணியுடன் அவரது கூட்டாளியான மகேந்திர சிம்மன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரை

இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணையின் அடிப்படையில், மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நிர்வாண கோலத்தில் ஜெம் வீரமணி..! தேனாம்பேட்டை பங்களாவில் சிக்கிய அந்த அதிர்ச்சி ஆதாரம்! தீவிரமாகும் விசாரணை..!!!

இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ், வீரமணி, மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறையில் தொடரும் காவல்

கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மூவரும் தொடர்ந்து சிறையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கின் விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக வீரமணி உள்ளிட்ட 3 பேரின் சிறைவாசம் மேலும் தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: முதுகில் குத்திய சாந்தி! சென்னை தேனாம்பேட்டை பங்களாவில் சிக்கிய ரகசிய CCTV காட்சி...! ஜெம் வீரமணியின் அந்தரங்க லீலைகள் அம்பலம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்..!!!