சுதந்திரத்தினவிழா கொண்டாடி வீடுதிரும்பிய பள்ளி மாணவி விபத்தில் பலி - நெஞ்சை உலுக்கும் கண்ணீர் சோகம்.! 

சுதந்திரத்தினவிழா கொண்டாடி வீடுதிரும்பிய பள்ளி மாணவி விபத்தில் பலி - நெஞ்சை உலுக்கும் கண்ணீர் சோகம்.! 


Chennai Chrompet Hasthinapuram School Girl Died

75-வது சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கச்சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவி விபத்தில் பலியான சோகம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி லட்சுமி ஸ்ரீ (வயது 17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இன்று 75-வது சுதந்திர தினவிழா உலகெங்கும் உள்ள இந்தியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்று காலை தனது பள்ளியில் நடைபெறும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு லட்சுமி ஸ்ரீ தனது மிதிவண்டியில் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அஸ்தினாபுரம் நோக்கி பயணம் செய்த நிலையில், அவ்வழியே வந்த பொழிச்சனூர் - அஸ்தினாபுரம் செல்லும் 52H பேருந்து லட்சுமி ஸ்ரீயின் மீது மோதியுள்ளது. 

chennai

இந்த விபத்தில், மாணவி லட்சுமி ஸ்ரீ நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சென்னை மாநகர அரசு பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது.