அதிவேகத்தில் வந்த பேருந்து.. கல்லூரி மாணவி தலைநசுங்கி பரிதாப மரணம்.. நெஞ்சைஉலுக்கும் சோகம்.!

அதிவேகத்தில் வந்த பேருந்து.. கல்லூரி மாணவி தலைநசுங்கி பரிதாப மரணம்.. நெஞ்சைஉலுக்கும் சோகம்.!


Chennai Avadi College Girl Died Accident Minjur Vandalur Highway Road

கல்லூரிக்கு சென்ற மாணவியின் மீது பேருந்து மோதி, சக்கரம் ஏறி மாணவி தலைநசுங்கி உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள ஆவடி, முத்தாபுதுப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவரின் மகள் பாரதி (வயது 24). இவர் பூந்தமல்லி, தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் எம்.எஸ்சி முதல் வருடம் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் பாரதி தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது, வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை, பட்டாபிராம் அமுதூர்மேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றுள்ளார். 

அந்த சமயத்தில், அவருக்கு பின்னால் அதிவேகத்துடன் வந்த தனியார் கம்பெனி பேருந்து, பாரதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த பாரதியின் தலையில் பேருந்து சக்கரம் ஏறியுள்ளது. 

chennai

இந்த விபத்தில், பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்து ஓட்டுநராக செங்குன்றத்தை சேர்ந்த முனியாண்டியை (வயது 55) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.