"பிறந்து 3 மணிநேரம் தான்" - பச்சிளம் குழந்தையை நடுரோட்டில் வீசிச்சென்ற அவலம்.. திருநங்கைக்கு குவியும் பாராட்டு.!chengalpattu-transgender-rescued-baby-from-roadside

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழுப்பேடு சுங்கச்சாவடி பகுதியில், திறந்தவெளியில் இன்று காலை பச்சிளம் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது. அப்போது, அவ்வழியே சென்றுகொண்டு இருந்த திருநங்கை ஒருவர், குழந்தை திறந்தவெளியில் கேட்பாரற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

மீட்கப்பட்ட பச்சிளம் பிஞ்சு:

குழந்தை பிறந்து சிலமணிநேரமே ஆகி இருக்கலாம் என அடையாளம் காணப்பட்ட காரணத்தால், உடனடியாக அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த மருத்துவ பணியாளர்கள், திருநங்கையிடம் குழந்தை மீட்கப்பட்டது குறித்து தகவல் சேகரித்து பின் மருத்துவ சிகிச்சைக்காக குழந்தையை அழைத்து சென்றனர். 

இதையும் படிங்க: கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை; சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!

காவல்துறை விசாரணை:

தற்போது காவல் துறையினர் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து 3 மணிநேரத்திற்குள் வீசி செல்லப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. குழந்தையை மீட்ட திருநங்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு