போதையில் ஆபாச நடனம்! பெண் மீது விபூதி அடித்து விளையாடிய அர்ச்சகர்கள்! விருதுநகரில் பரபரப்பு...



controversy-in-srivilliputhur-temple-priests

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் என்பது பக்தர்கள் அதிகம் கூடும் பரபரப்பான பக்தி தலங்களில் ஒன்றாகும். இங்கு உதவி அர்ச்சகராக பணியாற்றும் கோமதி விநாயகம் என்பவரது இல்லத்தில் நடந்த நிகழ்வு தற்போது பெரிய விவாதமாகி உள்ளது.

வீடியோவால் பரபரப்பு

கும்பாபிஷேகம் பணிக்காக அவரது வீட்டில் தங்கியிருந்த சில அர்ச்சகர்கள் மதுபானம் அருந்தி, அருகிலிருந்த பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக நடனமாடியதாக கூறப்படுகிறது. இந்த செயல்கள் தொடர்பான வீடியோவை, முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரனின் மகன் சதுரநாதன் எடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் கோவில் நிர்வாகத்தினருக்கும் அனுப்பி புகார் அளித்துள்ளார்.

கோவில் வளாகத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானம்

மேலும், இதே கோவில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது, சில அர்ச்சகர்கள் விபூதி தூவி விளையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இது, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சொத்துகாக என் மகள்கள் அப்பா என்றுகூட பார்க்கல! அதனால் வேதனையடைந்த தந்தை 4 கோடி சொத்தை என்ன செய்துள்ளார் பாருங்க!

 நடவடிக்கைக்கான கோரிக்கை

இந்த சம்பவங்கள் குறித்து இந்து முன்னணி கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களிடம் இருந்து நியாயமான விளக்கம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கணேசன், வினோத், கோமதி விநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எலி சாப்பிட்ட பழத்தில்தான் ஜூஸ்! கோவிலம்பாக்க ஜூஸ்கடையில் எலி உட்கார்ந்து சாப்பிடும் பழம்!அதிர்ச்சி வீடியோ....