சொத்துகாக என் மகள்கள் அப்பா என்றுகூட பார்க்கல! அதனால் வேதனையடைந்த தந்தை 4 கோடி சொத்தை என்ன செய்துள்ளார் பாருங்க!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் விஜயன், தனது சொத்துக்களை குடும்பக் தகறாரால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சொத்துக்காக தந்தைக்கு ஏற்பட்ட மனவேதனை
விழுப்புரத்தில் வாழும் விஜயனுக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆனால், சொத்து காரணமாகவே இருவரும் தந்தையை மிரட்டியதாகவும், அவரிடம் அழுத்தம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தன்னுடைய வீட்டுக்கு அருகிலுள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான இரண்டு வீட்டு பத்திரங்களை காணிக்கையாக செலுத்தினார்.
கோவில் உண்டியலில் பத்திரம் காணிக்கையாக செலுத்தல்
கோவிலில் உண்டியல் எண்ணும் பொழுது, அதிகாரிகள் இந்த பத்திரங்களை கண்டுபிடித்து, விஜயனை அழைத்து விசாரித்தனர். பத்திரங்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டதால், அது சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்குப் பதிலாக, விரைவில் சொத்துகளை கோவில் பெயருக்கு மாற்றி எழுதுவதாக விஜயன் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: எலி சாப்பிட்ட பழத்தில்தான் ஜூஸ்! கோவிலம்பாக்க ஜூஸ்கடையில் எலி உட்கார்ந்து சாப்பிடும் பழம்!அதிர்ச்சி வீடியோ....
பிள்ளைகளின் செயல் மீது தந்தையின் வேதனை
இதுகுறித்து தந்தை விஜயன் கூறும்போது, “என் மகள்கள் என்னை அப்பா என்று கூட அழைக்கவில்லை. அவர்கள் அந்த சொத்தை பெற தகுதியில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், பத்திரங்களை கோவிலுக்கு வழங்கியதும் மகள்களிடம் இருந்து கொலை மிரட்டல் கிடைத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் திடீரென வெடித்த ஏசி! மெத்தையில் உறங்கிய 4 வயது சிறுவன்! அதிர்ச்சிகரமான சம்பவம்...