கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை; சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!Madurai New Born Baby Throwed On Canal 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள பெத்தானியாபுரம், செபாஸ்டின் நகரில் சர்ச் ஒன்று உள்ளது. இந்த சர்ச்சுக்கு எதிர்ப்பு சாக்கடை இருக்கிறது.

பெண் குழந்தை சடலமாக மீட்பு:

இந்நிலையில், சாக்கடையில் இன்று பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

காவல்துறையினர் விசாரணை:

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நிகழ்விடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.