குடிப்பதை கண்டித்த தாயின் கள்ளக்காதலன்.. கட்டையால் அடித்தே கொன்ற 24 வயது இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.!

குடிப்பதை கண்டித்த தாயின் கள்ளக்காதலன்.. கட்டையால் அடித்தே கொன்ற 24 வயது இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.!


Chengalpattu Kattankulathur Man Killed Mother Affair Boy Friend

எதற்காக தினமும் குடித்துவிட்டு வருகிறாய்? என தாயின் கள்ளக்காதலன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் மகன், தாயின் கள்ளக்காதலனை கட்டையால் அடித்தே கொன்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55). இவர் கொத்தனாராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக சிங்கபெருமாள்கோவில் பகுதியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

அப்போது, சித்தலாக பணியாற்ற வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, பின்னாளில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தை உதறித்தள்ளிய மனோகரன், கள்ளக்காதலி மற்றும் அவரின் மகன் தினேஷ் (வயது 24) ஆகியோருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். 

இவர்கள் அனைவரும் கரும்பூர் ரோஜா தோட்டம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். தினேஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தினேஷிற்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், மனோகரனுக்கும் - தினேஷிற்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தினேஷ் மனோகரனிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். 

Chengalpattu

நேற்று முன்தினம் போதையில் வீட்டிற்கு சென்ற தினேஷ், ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மனோகரன் தினமும் எதற்காக குடித்துவிட்டு வருகிறாய்? என கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து மனோகரனை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுள்ளார். 

மனோகரனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மனோகரன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் காவல் துறையினர், தலைமறைவாக இருந்த தினேஷை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.