தனிமை, தாயின் பிரிவையும் தாங்க முடியல.... அம்மா போன அதே நாளில் நானும் போறேன்! இளம்பெண் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு செய்த அதிர்ச்சி! பின்னணியில் இருக்கும் உண்மை!!!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரகடம் பகுதியில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 27 வயது நதியா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆரம்ப விசாரணையில் மன உளைச்சல் காரணமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனிமை காரணமா? போலீசார் விசாரணை
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நதியா, கடந்த நான்கு ஆண்டுகளாக மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்தார். உடன் தங்கியிருந்த தோழி ஊருக்குச் சென்றிருந்த நிலையில், தனிமை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என தகவலின்படி தெரிகிறது.
இதையும் படிங்க: அக்கா கதவை திற ரொம்ப பயமா இருக்கு! கதவை உடைத்து பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி.. கன்னியாகுமரியில் நடந்த பயங்கரம்!
தொலைபேசி எடுக்காததால் சந்தேகம்
நதியா நீண்ட நேரமாக தொலைபேசிக்கு பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த தோழி, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் நதியா சடலமாகக் கிடந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உருக்கமான கடிதம்… தாய் நினைவு நாள் குறிப்பிடல்
மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், நதியா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், 2018 ஏப்ரல் 15 அன்று இறந்த தாயின் நினைவு நாளிலேயே தானும் உயிரிழக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். தாயின் பிரிவை தாங்க முடியாமல் இருந்தது மற்றும் தனிமை உணர்வு இவரை இத்தகைய முடிவுக்கு தள்ளியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: என்னால இனிமே தாங்க முடியாது! 6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை செய்த கொடூரம்! வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!