எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு..! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு..! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!


case against Edapadi palanisami

திமுகவின் மூத்த தலைவரான ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தார். அதில்,  எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும் மேல்முறையீடு செய்தது.

எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்ட நிலையில், இதனை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று தெரிவித்தனர்.