என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை அடித்தே கொன்ற பாசமிகு அண்ணன்... தருமபுரியில் பரபரப்பு சம்பவம்.!

தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை, அண்ணன் இரும்புராடால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த சென்னன் என்பவரின் சகோதரியிடம் மதுபோதையில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன பெண் கூச்சலிட்ட நிலையில், ராஜேஷை அருகிலிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த சென்னன் ஆவேசமடைந்து அங்கிருந்த இரும்புராடை எடுத்து ராஜேஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் ராஜேஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சென்னனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.