தமிழகம் மருத்துவம்

மக்களே மிக கவனமாக இருங்கள்.! தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு.!

Summary:

கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில்,

கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்திலும் பரவ துவங்கி உள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தமிழக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நோய்த்தொற்றுக்கான சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


Advertisement