'பானி கொடுங்க' தண்ணீர் கேட்டு பெண்ணிடம் அத்துமீற முயற்சி.. வடமாநில இளைஞர் அடித்தேகொலை.!
தண்ணீர் கேட்ட இளைஞர் பெண்ணிடம் அத்துமீற முயற்சித்தால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.
தண்ணீர் கேட்டார்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராமராஜன் கண்டிகை பகுதியில், நேற்று மாலை நேரத்தில் வடமாநில இளைஞர் போதையில் வந்துள்ளார். இவர் ஒரு வீட்டுக்குச் சென்று குடிக்க தண்ணீர் வேண்டும் என ஹிந்தி மொழியில் கேட்டு வாங்கி குடித்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
அத்துமீற முயற்சி:
அப்போது, தனியாக இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண்மணி அலறிய நிலையில், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இளைஞரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் இளைஞர் மயங்கி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

மரணம் உறுதி:
தகவல் அறிந்து வந்த வெங்கல் காவல்நிலைய அதிகாரிகள், இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இதனை கொலை வழக்காக மாற்றிய அதிகாரிகள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அசாமை சேர்த்தவர்:
மேலும், இளைஞரை கொலை செய்ததாக பெண்களின் உறவினர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ப்ரஜன் தாஸ் என்பது தெரியவந்தது. இவர் நேற்று தான் அசாமில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்துள்ளார். வந்த நாளில் பெண்களிடம் அத்துமீற முயற்சித்து இருக்கிறார்.

இவர் தாக்குதலில் உயிரிழந்தாரா? அல்லது மது அருந்திய காரணத்தால் நாக்கு வறண்டு நீரிழப்பால் உயிரிழந்தாரா? என விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!