ஆன்லைன் ரம்மியால் பலியான மற்றொரு உயிர்... சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை.!

ஆன்லைன் விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்த சினிமா கேமரா மேன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்துள்ள மார்த்தாண்டன் துறையைச் சார்ந்தவர் தேவதாசன் நாற்பது வயதான இவ்வாறு சினிமாவில் கேமராமேனாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கியிருந்து பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் ஆன்லைன் சூது விளையாட்டிற்கு அடிமையானதாக தெரிகிறது.
இதனால் பல லட்ச ரூபாயை அவர் இழந்துள்ளார். பல லட்ச ரூபாய் கடன் வாங்கி கடனாளி ஆனவர் தனது நிலத்தை விற்று கடனை அடைத்திருக்கிறார். அதன் பிறகு மனைவியின் ஊரான பூத்துறை கோவில் வளாகத்தில் வந்து தங்கி இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை தனது சொந்த ஊரான மார்த்தாண்டன் துறைக்கு சென்று இருக்கிறார்.
தனது பெற்றோரிடம் ஆன்லைன் சூது விளையாட்டிற்கு அடிமையானது பற்றியும் அதனால் சொத்துக்களை இழந்ததை பற்றியும் கூறிய அழுதுள்ளார் பின்னர் மாடிக்கு சென்ற இவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மின்விசிறியில் தூக்கில் தொங்கி இருக்கிறார் தேவதாசன். கதவை உடைத்து அவரை மீட்ட உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறை பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.