திமுக ஆட்சியின் ஒரு ஆண்டில் மக்களுக்கு சலிப்பு தட்டி விட்டது.! தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.! அண்ணாமலை பேச்சு.!

திமுக ஆட்சியின் ஒரு ஆண்டில் மக்களுக்கு சலிப்பு தட்டி விட்டது.! தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.! அண்ணாமலை பேச்சு.!


annamalai-talk-about-dmk

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மத்திய பாஜக 8 ஆண்டு கால ஆட்சியில் மக்களும், பெண் சமுதாயத்தினரும் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.

திமுக ஆட்சியின் ஒரு ஆண்டில் மக்களுக்கு சலிப்பு தட்டி விட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பா.ஜனதா ஆட்சியுடன் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை ஒப்பிட்டால், ஏணி வைத்தால் கூட எட்டாது.
 
சமீப காலமாக தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருகிறது. மத்திய பாஜக அரசு திட்டங்களை தமிழகத்தில் திமுக பெயர் மாற்றம் செய்து அரசியல் செய்து வருகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தல் எப்போதும் வரும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் டெல்லி செல்வார்கள் என தெரிவித்துள்ளார்.