காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி.. சிலம்ப பயிற்சியாளர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம்.!

திருச்சி மாவட்டம் பீமநகரில் சிலம்ப பயிற்சியாளர்கலான சிவராமன் மற்றும் ஜெயகுமாா் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் விராலிமலை பகுதி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சென்றடைந்த பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுத்த பின் வீட்டிற்கு செல்வதற்காக இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதியதில் சிவராமன் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். மேலும் ஜெயகுமார் பலத்த காயங்களோடு உயிர் தப்பினார். இதனையடுத்து விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த விராலிமலை காவல் துறையினர் ஜெய்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த சிவரமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிலம்ப பயிற்சியாளர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.