நடு ரோட்டில் ரவுடி கும்பல் மீது கொலைவெறி தாக்குதல்: ஒருவர் பலி 2 பேர் படுகாயம்..!

நடு ரோட்டில் ரவுடி கும்பல் மீது கொலைவெறி தாக்குதல்: ஒருவர் பலி 2 பேர் படுகாயம்..!


A demanding decision befell the raider whose life was murder and robbery

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியிலுள்ள கம்மியம்பேட்டை பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் கருப்பு என்கிற கண்ணன் (26). ரவுடியான இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணனை அரிவாளால் வெட்டினர். இதனை அவரது நண்பர்களான வன்னியர்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த ரேவந்த் (25), கம்மியம்பேட்டையை சேர்ந்த பூச்சி என்கிற மூர்த்தி (22), ஜீவா என்கிற ஜீவானந்தம் (22) ஆகிய 3 பேரும் தடுத்தனர்.

அப்போது அந்த மர்ம நபர்கள் ரேவந்த், மூர்த்தி ஆகிய 2 பேரையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இந்த திடீர் தாக்குதலில் கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ரேவந்த், மூர்த்தி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். ஜீவானந்தம் மட்டும் காயமின்றி தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர், திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து,  கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரேவந்த், மூர்த்தி ஆகிய இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில்  ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.