74 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. ஈரோட்டில் துயரம்.!
வீட்டில் திருட வந்த இளைஞர்கள் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அரங்கேற்றிய கொடூரத்தில், இறுதியில் மூதாட்டியின் உயிர் பறிபோனது.
திருட்டு முயற்சி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் வசித்து வந்த 74 வயது மூதாட்டி, கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அங்குள்ள மண் தொழிலாளர் இரண்டாவது வீதியில் வசித்து வரும் ஹரிகுமார் (வயது 22), கிரி (வயது 23) ஆகியோர் பித்தளை பாத்திரத்தை திருட முயற்சித்தனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!
வன்கொடுமை:
இதனை தடுக்க முயன்ற மூதாட்டியை குடிபோதை வாலிபர்கள் கழுத்தை நெரித்துக்கொலை செய்ய முற்பட்டு, பின் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

உயிரிழப்பு:
இதுதொடர்பான புகாரின் பேரில் அதிகாரிகள் சிசிடிவி கேமிரா உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்தனர். இதனிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூதாட்டி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குண்டாசில் சிறை:
இந்த வழக்கில் கைதாகி இருந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது கோவை சீரியல் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 74 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. திருட வந்த வீட்டில் போதையில் பெருங்கொடூர செயலால் பரபரப்பு.!