குடியால் அழிந்த குடி.. கணவனை கழுத்தை நெரித்துக்கொன்ற மனைவி.. கோவையில் சோகம்..!
அனுதினமும் கணவனின் மதுப்பழக்கத்தால் சித்ரவதை அனுபவித்து வந்த பெண் கணவரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தார்.
மதுப்பழக்கம்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர், மூக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 38). இவர் கைத்தறி தொழிலாளி ஆவார். இவரின் மனைவி சசி பிரியா (வயது 38). மதுப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ், அவ்வப்போது வீட்டில் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரியாணி எலும்புத்துண்டு தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் மரணம்.. ஈரோட்டில் சோகம்.!
பணம் கேட்டு பிரச்சனை:
இதனால் தம்பதிகளிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 10ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ரமேஷ் மதுபானம் குடித்துள்ளார். பின் மறுநாள் காலை வரையில் மதுகுடித்தவர், தொடர்ந்து கூடுதலாக குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார்.

உயிரிழப்பு:
மனைவி தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தும் பலனில்லை. அவரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சசிபிரியா கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து கணவரின் கழுத்தில் இறுக்கி கீழே தள்ளியதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
மரணம் உறுதி:
ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு பதறிய பெண்மணி, கணவரின் அண்ணன் கார்த்திகேயனுக்கு தொடர்பு கொண்டு மதுகுடித்துக்கொண்டு இருந்தவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். பின் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது. மேலும், கஸுத்தில் இருந்த நகக்கீறலையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தவே, இறுதியில் சசிபிரியா உண்மையை சொல்லி இருக்கிறார். இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் சசிப்பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் இப்படியா? வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!