கண்ணுப்பட போகுது.... 83 பேர். 6 தலைமுறைகள் கொண்ட கூட்டு குடும்பம்! ஒரே ஒரு கிச்சன் பகிர்ந்து செய்யும் வேலைகள்..! தனிக்குடித்தனம் பெருகி வரும் காலத்தில் உலகையே மிரள வைத்த இந்தக் கூட்டு குடும்பம்.!!!



andhra-nagappa-family-83-members-joint-family

தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் காலத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தனது ஒற்றுமையான வாழ்க்கை முறையால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 6 தலைமுறைகளாக 83 பேர் ஒன்றாக வாழ்ந்து வரும் நாகப்பா குடும்பம், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

6 தலைமுறைகளாக நீடிக்கும் ஒற்றுமை

அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தில் மொத்தம் 83 உறுப்பினர்கள் உள்ளனர். வசதிக்காக அடுத்தடுத்த நான்கு வீடுகளில் வசித்தாலும், குடும்ப நிர்வாகம் முதல் அன்றாட முடிவுகள் வரை அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்படுகின்றனர். தலைமுறைகள் மாறினாலும், குடும்ப ஒற்றுமையை அவர்கள் தொடர்ந்து காத்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: இதுதாங்க அதிஷ்டம்! துர்க்கை அம்மன் பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற தொழிலாளி! ஒரே இரவில் லட்சாதிபதி ஆகிட்டாரு! வாழ்க்கையில் மறக்க முடியாத நவராத்திரி....

ஒரே சமையலறை... பகிர்ந்து செய்யும் பொறுப்புகள்

இந்த பெரிய குடும்பத்தின் தனிச்சிறப்பு, அனைத்து 83 பேருக்குமான உணவும் தினமும் ஒரே சமையலறையில் தயாராகிறது என்பதுதான். வயது மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பொறுப்புகள் பகிரப்பட்டுள்ளதால், குடும்ப நிர்வாகம் சீராக நடைபெறுகிறது. மூத்தோர் வழிகாட்ட, மருமகள்கள் வீட்டுப் பணிகளை இணைந்து கவனிக்கின்றனர். அதே நேரத்தில் இளைஞர்கள் விவசாயம் மற்றும் பிற தொழில்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.

பொதுக் கணக்கில் வருமானம்... குடும்பத்திற்கே செலவுகள்

பொருளாதார மேலாண்மையிலும் இந்தக் குடும்பம் தனித்துவமான முறையைப் பின்பற்றுகிறது. குடும்பத்திற்குச் சொந்தமான 120 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் 4 பேருந்துகள் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கும் தனியாகப் பகிரப்படுவதில்லை. அனைத்தும் ஒரே பொதுக் கணக்கில் சேர்க்கப்பட்டு குடும்பத்தின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற வாழ்க்கை முறையை தலைமுறைகள் கடந்தும் காப்பாற்றி வரும் நாகப்பா குடும்பம், இன்றைய சமூகத்தில் ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: இப்படி ஒரு மனுஷனா? திருமணத்திற்கு வந்தவங்களுக்கு மணமகன் கொடுத்த மிகப்பெரிய பரிசு! 33.6 கோடி ரூபாய்..... ஒட்டுமொத்த கிராமத்தையும் கோடீஸ்வரராக்கிய மாப்பிள்ளை..!!!