இப்படி ஒரு மனுஷனா? திருமணத்திற்கு வந்தவங்களுக்கு மணமகன் கொடுத்த மிகப்பெரிய பரிசு! 33.6 கோடி ரூபாய்..... ஒட்டுமொத்த கிராமத்தையும் கோடீஸ்வரராக்கிய மாப்பிள்ளை..!!!



maharashtra-wedding-group-insurance-gift-village

மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு திருமணம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமண விருந்தினர்களுக்கு வழக்கமான பரிசுகள் வழங்குவதற்கு பதிலாக, ஒரு முழு கிராம மக்களுக்கே விபத்துக் காப்பீடு செய்து கொடுத்த சம்பவம் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. நாந்தேடு மாவட்டத்தைச் சேர்ந்த பெத்கர் குடும்பத்தின் இந்த முயற்சி சமூக அக்கறையின் புதிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

திருமணத்தில் வித்தியாசமான திரும்பப் பரிசு

மகாராஷ்டிராவின் நாந்தேடு மாவட்டம் கந்தஹார் தாலுக்காவில் உள்ள பகதூர்புரா கிராமத்தில், கடந்த மே 20 ஆம் தேதி சித்தேஷ்வர் பெத்கரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்குவதற்குப் பதிலாக, கிராமத்தில் வசிக்கும் 3,465 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான Group Accident Insurance திட்டத்தை மணமகன் குடும்பத்தினர் வழங்கினர்.

இதையும் படிங்க: 20 நாட்களில் வங்கி கணக்கில் ரூ. 9,000 வரை வரவு வைப்பு..... மகளிர் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை! ஸ்டாலினின் அதிரடி சர்ப்ரைஸ் கிப்ட்!!!

இதன் மூலம் மொத்தமாக சுமார் ரூ.33.6 கோடி மதிப்பிலான காப்பீட்டு பாதுகாப்பு கிராம மக்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கான முழு பிரீமியம் தொகையையும் பெத்கர் குடும்பத்தினரே செலுத்தியுள்ளனர். இந்த காப்பீட்டு திட்டம் ஒரு ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு பாதுகாப்பு

கிராமப்புறங்களில் விவசாய வேலைகளின் போது ஏற்படும் விபத்துகள், பாம்புக்கடி, மின்னல் தாக்குதல் போன்ற எதிர்பாராத சம்பவங்களால் ஏழை குடும்பங்கள் பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கி விடுகின்றன. இதை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்ததாக மணமகன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல குடும்பங்களுக்கு அவசர நேரங்களில் உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கிராம சபை உதவியுடன் செயல்பாடு

இந்தத் திட்டத்தை சீராக செயல்படுத்த கிராம சபை உதவியுடன் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல் காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள அனைவரும் எந்த ஆவண சிக்கலும் இல்லாமல் பயன்பெற முடியும் என கூறப்படுகிறது.

சாதாரண திருமண பரிசுகளைத் தாண்டி, மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பாக மாறிய இந்த விபத்துக் காப்பீடு திட்டம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!