வெளிநாட்டில் இருந்த தாய்! 12 மகளுக்கு சிறுநீரகத் தொற்றால் மருத்துவமனையில் அம்பலமான உண்மை.... காமக் கொடூர தாத்தாவின் லீலைகள்!!!
இலங்கையின் கம்பளை பகுதியில் 12 வயது பள்ளி மாணவி ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் தாத்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த தகவல்
தகவலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு 10 வயது இருந்த காலத்திலிருந்தே 54 வயதான அவரது தாத்தா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட விரிவான பரிசோதனையிலேயே இந்த விவரம் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உலகம் கெட்டு போச்சு... ஆண் குழந்தையைப் பெற்ற பிளஸ் 2 மாணவி! அப்பா யாருன்னு கேட்டா ஆடிப்போய்ருவீங்க... பேரதிர்ச்சியில் பெற்றோர்!!!
தாத்தா கைது... நீதிமன்ற உத்தரவு
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் கம்பளை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தாத்தாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதவான் சரசி ஸ்ரீ பரணமன், சந்தேகநபரை ஜூலை 24 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணை தீவிரம்
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை, கம்பளை போலீசார் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவினர், மூத்த போலீஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி வழக்கின் அனைத்து அம்சங்களையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தை சொல்லி பிளஸ் 2 மாணவியை சீரழித்த கட்டட மேஸ்திரி! மருத்துவமனையில் பெற்றோர்க்கு காத்திருந்த அதிர்ச்சி...!!!