74 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. திருட வந்த வீட்டில் போதையில் பெருங்கொடூர செயலால் பரபரப்பு.!



Tamil Nadu Shock: Elderly Woman, 74, Assaulted During House Theft; Two Held

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு முயற்சி: 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, மேற்கு தெரு மண் தொழிலாளர் முதல் வீதியில் தனியே வசித்து வருபவர் கங்கா (வயது 74), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரின் வீட்டில் சம்பவத்தன்று புகுந்த 2 இளைஞர்கள், பித்தளை பாத்திரம், அண்டாவை திருடிக்கொண்டு இருந்துள்ளனர். 

இதையும் படிங்க: #BREAKING: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. சென்னையில் பேரதிர்ச்சி.. வடமாநில 5 பேர் கும்பல் வெறிச்செயல்..!

பாலியல் பலாத்காரம்:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரை அழைக்க சத்தமிட்ட நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் மூதாட்டியின் வாயை பொத்தி, கழுத்தை நெரித்து இருக்கின்றனர். மேலும், மூதாட்டியை மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து தப்பிச் சென்றனர்.

sexual abuse

இருவர் கைது:

இதனிடையே, அபயக்குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயத்துடன் இருந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, இதே பகுதியில் வசித்து வரும் ஹரிகுமார் (வயது 22), கிரி கண்ணன் (வயது 23) ஆகியோர் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.

விசாரணைக்குப்பின் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. தமிழகத்தில் ஷாக்.!