13 வயது சிறுமி..! 26 வயது இளைஞர்..! 9 மாதமாக நடந்த கூத்து..! சிறுமி வயிறு வலிப்பதாக கூறிய நிலையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

13 வயது சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் கொடுமை செய்ததில், சிறுமி கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அருண். 26 வயதாகும் அருண் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்த அருண், அந்த வீட்டில் இருந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை பாலியல் தேவைக்கு பயன்படுத்தி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இப்படியே 9 மாதங்கள் கடந்த நிலையில், சிறுமி திடீரென வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூற, பெற்றோர் சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச்சென்று சோதனை செய்துள்ளனர். மருத்துவர் சிறுமியை சோதனை செய்ததில், சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்துசிறுமியிடம் விசாரித்ததில் அருண் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லைகள் குறித்து பெற்றோரிடம் கூற, அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் அருண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்து காவலில் அடைத்தனர்.