கழுத்தில் தாலியுடன் சமந்தா.. திருமணத்திற்கு பின் வெளியான புதிய லுக்.!
எலும்புக்கூடாக 2 வயது குழந்தை.. உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கொன்று வீசிய தாய்.. மதுரையில் கோரம்.!
மதுரை மாவட்டத்தில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் சொரிக்கான்பட்டி, திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்பவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் கூலி தொழிலாளர்களாக தென்காசியை சேர்ந்த கண்ணன், கேரளா மாநிலம் புனலூரை சேர்ந்த கலா சூரியா வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் கலாவுக்கு முன்னதாகவே திருமணம் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கண்ணன், கலா இருவருக்கும் காதல் மலரவே, இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர்.
குழந்தையை கொன்று வீசிய கொடூரம்:
கலா தன்னுடன் 2 வயது குழந்தையையும் அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு 2 வயது பெண் குழந்தை சிவானி தொந்தரவாக இருப்பதாக கண்ணன் நினைத்துள்ளார். இதனால் அடிக்கடி துன்புறுத்தி வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக கலா சூரியா கடைக்கு சென்றிருந்தபோது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த கலா சூர்யாவும் தனது கணவனின் செயலை தட்டிக்கேட்காமல் அவருடன் சேர்ந்து குழந்தையை அருகில் இருக்கும் காட்டுபகுதிக்குள் வீசியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: இச்சைக்காக 3 வயது மகள் படுகொலை.!! தாய், கள்ளக்காதலன் கைது.!!

அம்பலமான உண்மை:
இந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தனது தாய் வீட்டிற்கு கலா சென்றுள்ளார். அப்போது குழந்தை குறித்து உறவினர்கள் கேட்கவே முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த கலாவின் தாய் சத்யா கேரள மாநிலம் புனலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கேரள மாநில காவல்துறையினர் செக்கானூரணி காவல்துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில் குழந்தையை கொலை செய்து வீசிய அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
குழந்தை சடலமாக மீட்பு:
மேலும் காட்டுப் பகுதியில் எலும்பு துண்டுகளாக கிடந்த குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்ணன் மற்றும் கலா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கலாவுக்கு கண்ணன் மூன்றாவது கணவர் என்பதும், இரண்டாவது கணவருக்கு பிறந்த குழந்தை சிவானி என்பதும் இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் மோகத்துக்கு பலியான 3 வயது குழந்தை.. பிஸ்கட்டில் விஷம் வைத்து நடந்த பயங்கரத்தின் அதிர்ச்சி பின்னணி.!