கள்ளக்காதல் மோகத்துக்கு பலியான 3 வயது குழந்தை.. பிஸ்கட்டில் விஷம் வைத்து நடந்த பயங்கரத்தின் அதிர்ச்சி பின்னணி.!
3 வயது குழந்தையை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு பகுதியில் வசித்து வருபவர் ரூபினி. இவரது கணவர் பால்ராஜ். தம்பதிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக ரூபினி தனது கணவரை பிரிந்து மூன்று வயது குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ரூபினிக்கும் சற்குணம் என்பவருக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைக்கு விஷம் வைத்து கொலை:
இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு தனிமையில் சந்திப்பதற்காக சென்றிருந்த நிலையில், 3 வயது குழந்தையையும் ரூபினி தன்னுடன் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தனிமையில் இருக்க குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணி பிஸ்கட்டில் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி பலாத்காரம்... சித்தப்பாவுக்கு 35 வருட சிறை தண்டனை.!!

ஆயுள் தண்டனை:
இந்த விஷயம் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்த நிலையில், இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நீதிபதி ஏ.கே.பாபுலால் இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருக்கிறார்.