ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
14 வயது சிறுமி பலாத்காரம்... சித்தப்பாவுக்கு 35 வருட சிறை தண்டனை.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மனைவியின் அக்கா குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 35 வருட சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்(39). இவரது மனைவி தனலட்சுமி தனது அக்காவின் 14 வயது மகளை தனது வீட்டில் வளர்த்து வந்தார். இந்நிலையில் வினோத் தனது மகளின் உறவு முறையான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து சிறுமி, தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வினோத்குமார் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகாரளித்தார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த வினோத், சிறுமியை மிரட்டியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: கள்ள தொடர்பு.. கணவன், குழந்தை கொலை.!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! காதலன் ரிலீஸ்.!!
அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு 35 வருட கடுங்காவல் தண்டனையும் 40.000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை.!!