அடக்கொடுமையே... காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை.!!



pastor-got-7-years-imprisonment-for-sexual-abuse

திருப்பூர் மாவட்டத்தில் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 2022 ஆம் வருடம் நடந்த சம்பவத்தில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையம் அருகேயுள்ள கூனம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். 50 வயதான இவர் அப்பகுதியில் பாதிரியாராக சேவையாற்றி வந்தார். மேலும் அப்பகுதியில் ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கான விடுதியை நடத்தி வந்த இவர் அந்த மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் படிக்க வைத்து பராமரித்து வந்தார்.

tamilnadu

இந்நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் இவரது காப்பகத்தில் தங்கி படித்து வந்த 14 வயது மாணவிக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவி இது தொடர்பாக தனது தாயிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதர் அண்ட்ரூஸ் மீது திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காதலிப்பதாக நாடகம்... 15 வயது சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.!!

அந்தப் புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாதர் ஆண்ட்ரூஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த 3 வருடங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆண்ட்ரூஸுக்கு 7 வருட சிறை தண்டனை வழங்கி நீதிபதி கோகிலா தீர்ப்பளித்துள்ளார். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆண்ட்ரூஸ் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!