சிக்கன் சாப்பிட்டதால் எனக்கு கொரோனா வைரஸ் வந்திருச்சு..! கடலூரை கதிகலங்க வைத்த சிறுவன்..!

சிக்கன் சாப்பிட்டதால் எனக்கு கொரோனா வைரஸ் வந்திருச்சு..! கடலூரை கதிகலங்க வைத்த சிறுவன்..!



17 years old boy spread rumor about corono virus

சிக்கன் சாப்பிட்ட காசை திருப்பி கேட்டதால், சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக வதந்தி பரப்பிய சிறுவனை போலீசார் கைது செய்துள்னனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில், சிக்கன் கடை வைத்திருப்பவர் பக்ருதீன்.

பக்ரூதின் கடையில் சக்திவேல் என்ற 17 வயது சிறுவன் அடிக்கடி சிக்கன் சாப்பிட்டு வந்துள்ளார். சக்திவேல் தினமும் கடைக்கு வருவதால் பல நேரங்களில் அவரிடம் காசு வாங்காமல் சிக்கன் கொடுத்துள்ளார் பக்ரூதின். இந்நிலையில், சாப்பிட்ட சிக்கெனுக்கு காசு தருமாறு பக்ரூதின் சக்திவேலிடம் கேட்டுள்ளார்.

Corono virus

பக்ரூதினை பழிவாங்க நினைத்த சக்திவேல், தான் சிக்கன் சாப்பிட்டதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக வாட்சப் மூலம் வதந்தி பரப்பியுள்ளார். இந்த தகவல் கடலூர்  பகுதியில் வேகமாக பரவியதை அடுத்து சிக்கன் வியாபாரம் முற்றிலும் முடங்கியதோடு, மக்களிடையே கொரோனா வைரஸ் பீதியும் ஏற்பட்டது.

இந்த தகவல் பக்ரூதீனுக்கு தெரியவர, இதுகுறித்து அவர் காவல் நிலையாயத்தில் சக்திவேல் மீது புகார் கொடுத்தார். பக்ரூதின் அளித்த புகாரின் பேரில், 17 வயது சிறுவனான சக்திவேலை கைது செய்த போலீசார் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.