வெளிநாட்டில் இருந்து வந்ததை கூறாமல் மசூதியில் தங்கியிருந்த 16 பேர்..! 28 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவு..!



16-foreign-return-members-staying-at-dargah-without-inf

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரது வீட்டிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் அளிக்காமல் வெளிநாட்டில் இருந்து வந்த 16 பேர் மசூதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

corono

வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்து, மர்மமான முறையில் காஞ்சிபுரம் சுன்னத் ஜமாத் மசூதியில் தங்கியிருந்த 16 நபர்களை விசாரித்து, அவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைக்க அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.