யார் கெட்டவன்.? அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்... உறவினர்கள் சாலை மறியல்... பரபரப்பு.!

யார் கெட்டவன்.? அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்... உறவினர்கள் சாலை மறியல்... பரபரப்பு.!


15-year-old-boy-committed-suicide-due-to-shame

பள்ளி ஆசிரியை திட்டியதால்  மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவனின் இறப்பிற்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் அஜய். 15 வயதான இவர்  திருவாடனையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை  மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

tamilnaduஇந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

tamilnaduகாவல்துறையின் விசாரணையில் தற்கொலைக்கு முன்பாக மாணவன் எழுதி வைத்த கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் ஆசிரியை திட்டியதால் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மேலும் தன்னை கெட்டவன் என்று கூறியதால் தற்கொலை முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் மாணவர் அஜய்.. இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் மீது முறையான விசாரணையை காவல்துறை மேற்கொள்ளவில்லை எனக் கூறி அஜயின் உறவினர்கள் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.