நகை பிரியர்கள் மகிழ்ச்சி! வார இறுதியில் குறைந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம்...

சென்னையில் மே 23, 2025 அன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்துள்ளன. சமீப நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, பொதுமக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஆனால், மே மாத தொடக்கத்தில் விலை சிறிது குறைந்த பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.
கடந்த வாரம் தங்கம் விலை நிலவரம்
கடந்த வாரத்தில் தங்கம் விலை ரூ.70,000க்கும் கீழ் சென்ற நிலையில், நகை பிரியர்களிடம் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதனைத் தொடர்ந்து மீண்டும் விலை உயரத் தொடங்கியது.
நேற்று (மே 22) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,975க்கும், ஒரு சவரன் ரூ.71,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில், இன்று (மே 23) தங்கம் விலை குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து, தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்த நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பலர் நகை வாங்க பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. விலை நிலவரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.