என்னதான் நடக்குது கோவையில்.. 13 வயது சிறுவனை அடித்துக்கொன்ற நண்பர்கள்.. திடுக்கிடவைத்த வாக்குமூலம்.!



13-Year-Old Boy Beaten to Death by Friends in Coimbatore; Shocking Confession Revealed

சிறுவனை கொலை செய்ததாக அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நண்பர்களுடன் சென்றார்:

13 Year Old Boy Killed In Coimbatore News: கோயம்புத்தூர் மாவட்டம், இருகூர் நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் பாரதிராஜா (வயது 42). இவரின் மூத்த மகன் திவிஸ் (வயது 13). இவர் அங்குள்ள ஆர்.ஜி. புதூர் அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், வீட்டில் இருக்கிறார். கடந்த மே 15ம் தேதி பிற்பகல் நேரத்தில் நண்பர்களுடன் இருகூர் மாசாணியம்மன் கோயில் வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

மழுப்பல் & கிடுக்குபிடி விசாரணை:

பின் இரவில் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனின் நண்பர்களுடன் விசாரித்து இருக்கின்றனர். அப்போது, திவிஸ் மர்ம நபர் ஒருவருடன் தனியாகச் சென்றார் என கூறி மழுப்பி இருக்கின்றனர். இதனால் பதறிப்போன பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறுதியாக திவிஸுடன் மீன் பிடிக்கச் சென்ற சிறார்களிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

Crime news

அம்பலமான உண்மை:

சிறார்கள் கூறிய பதில் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, இறுதியாக உண்மையும் அம்பலமானது. அதாவது, வாய்க்காலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது சிறார்களிடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. அப்போது, ஆத்திரமடைந்த 2 சிறுவர்கள் காலியான மதுபாட்டில், கற்கள் கொண்டு திவிசை தாக்கி இருக்கின்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் சிறார்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என உடலை குழிதோண்டி புதைத்து வீட்டுக்கு வந்துள்ளனர்.

சிறுவர்கள் காண்பித்த அடையாளத்தின்படி உடலும் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு சிறுவர்களை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: காதல் ஜோடியிடம் காசு வாங்கி பஞ்சாயத்து? கொள்ளையனை அடித்தே கொன்ற நட்புகள்.. தர்மபுரியில் பயங்கரம்.!