கள்ளக்காதல் ஜோடிகளுக்கு ஆப்பு.. "5 ஆண்டு சிறை" புதிய சட்டத்தை அமல்படுத்திய அரசு.!
சமீப காலமாக தகாத உறவுகளால் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துவரும் நிலையில், இதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருந்தன.
இந்த நிலையில், மத்திய பிரதேச அமைச்சரவை பொது சிவில் சட்டத்திற்கு (Uniform Civil Code) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தில் திருமணமான ஒருவர் தனது கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் வேறொருவருடன் லிவிங் உறவில் ஈடுபட்டால், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் வரை அவருடன் மட்டுமே வாழ வேண்டும் என்றும், ஒரே ஒரு திருமணத்திற்கு மட்டுமே சட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஷ்! மீண்டும் இணைந்தனர்.... முதல்வர் விஜய் - சங்கீதா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
அதேபோல், திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் உறவில் வாழும் தம்பதிகள், ஒரு மாதத்திற்குள் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்பதும் இந்த பொது சிவில் சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாகும்.
இந்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதன் அமலாக்கம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்! இரு தரப்புக்கும் கோர்ட்டின் திடீர் உத்தரவு..!!!