என்னை அங்க தொடாதீங்க.! அணைக்கட்டில் இளைஞருடன் பேசி கொண்டிருந்த சிறுமியிடம் அத்துமீறிய கும்பல்! ஆபாச வார்த்தை பேசி, பெண் விலக விலக செய்த அராஜகம்..! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ...!!!
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில், இளைஞருடன் பேசிக் கொண்டிருந்த சிறுமியை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. உள்ளூர் அணைக்கட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சிறுமி துன்புறுத்தப்பட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இளைஞரை தாக்கி விரட்டிய கும்பல்
அணைக்கட்டு பகுதியில் சிறுமியும் அந்த இளைஞரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த சிலர் இருவரையும் சூழ்ந்துள்ளனர். முதலில் இளைஞரை தாக்கிய அந்த கும்பல், அவரை அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி மட்டும் அவர்களிடம் சிக்கியுள்ளார்.
சிறுமியிடம் அத்துமீறியதாக புகார்
தனியாக இருந்த சிறுமியிடம் அந்த நபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரை துன்புறுத்தி மானபங்கப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் கைகளைப் பிடித்தும், தலைமுடியை இழுத்தும், ஆபாச வார்த்தைகளைப் பேசியும் சிலர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்த சிறுமி துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீஸ் விசாரணை
அங்கு நடந்தவற்றை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து சம்பவம் குறித்து பரவலாக கவனம் திரும்பியுள்ளது. இதையடுத்து சமஸ்திபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
A minor girl in Bihar’s Samastipur was abused, harassed and molested by a group of men after they spotted her with a boy on a local embankment. The girl and the boy had gone there on a bike and were talking. According to sources, the group first abused and assaulted the boy, forcing him to flee, before turning on the girl. A video recorded at the spot and later circulated on social media purportedly shows the men grabbing the girl, pulling her by her hands and hair, and making lewd comments as she resisted.
#Samastipur #Bihar #BiharNews #WomenSafety #ChildSafety #CrimeNews
— IndiaToday (@IndiaToday) September 24, 2026
இதையும் படிங்க: சாவிலும் பிரியாத உண்மை காதல்! உயிருடன் மண்ணில் புதைக்கப்படும் காதலர்கள்...? வைரலான வீடியோவால் இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!!