சற்று முன்.... கடன் முழுவதும் தள்ளுபடி...! தமிழக மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!!



anbumani-ramadoss-agriculture-shadow-budget-2026

தமிழகத்தில் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 2026-27 நிதியாண்டுக்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார். ரூ.93,000 கோடி மதிப்பிலான இந்த அறிக்கையில், விவசாயம், பாசன வசதிகள், கடன் தள்ளுபடி, கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரூ.93,000 கோடி ஒதுக்கீடு... விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம்

வெளியிடப்பட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையின்படி, வேளாண் துறைக்கு ரூ.68,000 கோடியும், நீர்வளத்துறை மற்றும் பாசனத் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த நிதி ஒதுக்கீட்டை விட 446 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதமான ரூ.1.5 லட்சம் கோடி விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்காக செலவிடப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.....கடன் தள்ளுபடி வெளியான அதிரடி அறிவிப்பு! மேலும் ஊக்கத்தொகை மற்றும் ஓய்வூதியமும் உண்டு....! தமிழக மக்களுக்கு இன்பதிர்ச்சி !!!

கடன் தள்ளுபடி, இழப்பீடு மற்றும் குடும்ப நலத் திட்டங்கள்

விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.1 லட்சம் வரையிலான கடன்களை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடும், மேட்டூர் நீர் தாமதத்தால் ஏற்படும் கூடுதல் செலவுக்கு ரூ.5,000 சிறப்பு மானியமும் வழங்கப்படும். வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகையும், விவசாயிகளின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொள்முதல் விலை உயர்வு மற்றும் புதிய சட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை உறுதி செய்யும் வேளாண் நிழல் பட்ஜெட் அறிவிப்பின் ஒரு பகுதியாக, 'வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026' கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நெல் கொள்முதலை 70 லட்சம் டன்னாக உயர்த்த 6,000 கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசு கிடங்குகளின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்த்தப்பட்டு, அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு, எண்ணெய் வித்து சாகுபடிக்கு ஊக்கத்தொகை

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000-மும், எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு ரூ.7,000-மும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நல்லெண்ணெய், கடலெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்கள் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், அதன் விளைவாக தமிழகத்தில் நாள்தோறும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்வதாகவும் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: சற்று முன்... ஹாப்பி நியூஷ்! கடன் முழுவதும் தள்ளுபடி.... முதல்வர் விஜய் அறிவித்த புதிய அறிவிப்பு.!!!