கண் திருஷ்டியால் அவதிப்படுறீங்களா? இந்த விஷயங்களை செய்து பாருங்க.!



Suffering From Evil Eye? Try These Traditional Remedies to Remove Negative Energy

ஒருவரின் வாழ்க்கையில் தடைகள் தொடர கண்திருஷ்டி முக்கிய காரணமாக இருக்கலாம்.

தமிழ் பாரம்பரியத்தில் கண் திருஷ்டி என்பது ஒரு தனிநபரின் வளர்ச்சி, மகிழ்ச்சியை பார்த்து உருவாகும் எதிர்மறை தாக்கம் ஆகும். பல குடும்பங்களில் உடல்நலக்குறைவு, மன அமைதியின்மை, எதிர்பாராத தடை ஆகியவற்றை கண் திருஷ்டியுடன் தொடர்புபடுத்துவார்கள். 

கண் திருஷ்டி அறிகுறிகள்:

உடல் சோர்வு, காரணம் இல்லாத மனக்கவலை, அடிக்கடி கொட்டாவி, தூக்கமின்மை ஆகியவை கண் திருஷ்டி அறிகுறி ஆகும். சில வீடுகளில் பிரச்சனைகள், தொழில் நஷ்டம், உறவுகளில் மனக்கசப்பு, வேளைகளில் தடங்கல், முன்னேற்றத்தில் இடர்பாடு மற்றும் தோல்வி ஆகியவையும் கண் திருஷ்டி என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பாத்திரம் கழுவும்போது இந்த தவறுகளை செய்கிறீர்களா?.. மறைந்திருக்கும் ஆபத்து.!

health tips

வீடுகளில் செய்ய வேண்டியது:

கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வீட்டின் வாசலில் அலங்கார மலர்கள் வைக்கலாம். பெரிய கண்ணாடியை வைக்கலாம். வணிக நிர்வாணத்தில் கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி எலுமிச்சைப்பழம் மிதக்கவிடலாம். இதனால் எதிர்மறை சக்திகள் குறையும். எலுமிச்சை, குங்குமம் சேர்த்து வைப்பது நல்ல சக்தியை ஈர்க்கும்.

கிராமத்து முறைகள்:

கல் உப்பு, கடுகு, மிளகாய் கொண்டு திருஷ்டி கழிக்கலாம். இந்த பொருட்களை குடும்ப உறுப்பினர்களை நிற்க வைத்து சுற்றி எரிக்கலாம். ஓடும் நீரில் உப்பை கரைப்பதும் இருக்கிறது. இதனால் மனஅமைதி கிடைக்கும். வாசலில் எலுமிச்சை, பச்சை மிளகாய் சேர்த்து கட்டி தொடங்கவிடலாம். கற்றாழை, பூசணிக்காய் தொங்கவிடலாம். 

இதையும் படிங்க: வீட்டில் இருந்தாலும் ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறோம்? காரணம் இதுதானா?