செவ்வாய்க்கிழமை அன்று இதை செய்ய தவறாதீங்க.. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி.!Spiritual tips Tamil Tuesday

முன்னோர்கள் ராகு, கேதுவை தவிர்த்து நவகிரகத்தில் இருக்கும் கிரகங்களின் தொடர்போடு வார தினங்களுக்கு பெயர் வைத்தார்கள். செவ்வாய் கிரகத்தின் தொடர்புகள் செவ்வாய்க்கிழமையை குறிக்கும். மங்களகிரகமான கிரகமாக கருதப்படும் செவ்வாய் குடும்பத்தின் விசேஷங்களுக்கு, விரதங்களுக்கும் புகழ்பெற்ற நாளாக இருக்கிறது. 

அம்மனுக்கும், முருகனுக்கும் உகந்த நாளாக செவ்வாய்கிழமை உள்ளது. செவ்வாயின் பெயரிலேயே மங்களம் என்ற சொல் இருப்பதால் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கப்படும் செயல்கள் நிச்சயம் வெற்றி அடையும். மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, பூமி சம்பந்தமான சொத்துக்கள், செவ்வாய்தோஷம், சொந்த வீடு போன்றவற்றுக்கு காரணமாக செவ்வாய் இருக்கிறார். 

ஜாதகத்தில் செவ்வாய் நிலை சரிவர அமையாத பட்சத்தில் செவ்வாய் அம்சம் கொண்ட முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடலாம். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர் அதிகாலையில் நீராடி அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். வீட்டிற்கு திரும்பிய பின்னர் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற மந்திரங்களை பாடி மாலை 6 மணிக்கு மீண்டும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். இதனால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமையும். லாபம் உண்டாகும். பய உணர்வு நீங்கி தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.