பெண்களே.! வீட்டில் 6 மணிக்கு மேல் விளக்கேற்றிய பின்பு இதை கண்டிப்பாக செய்யக்கூடாது.!?

பெண்களே.! வீட்டில் 6 மணிக்கு மேல் விளக்கேற்றிய பின்பு இதை கண்டிப்பாக செய்யக்கூடாது.!?



Should not do these things at home after pooja

பொதுவாக அந்த காலகட்டங்களில் ஆரம்பித்து தற்போது வரை நம் அனைவரது வீட்டிலும் பூஜை அறை என்பது கண்டிப்பாக இருக்கும். பலருக்கும் கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுவது பிடித்தமான விஷயமாக இருந்தாலும் கோயிலுக்கு செல்ல முடியாத காலகட்டங்களில் பூஜை அறையில் அமர்ந்து கடவுளை வழிபடுவது மன அமைதியை தரும் என்றும் கருதி வருகின்றனர்.

Pooja room

ஒவ்வொருவரின் வீட்டில் பூஜை அறையிலும் ஒவ்வொரு விதமான கடவுள்களின் படங்களும், விளக்குகளும், வித்தியாசமான வழிபாடு முறைகளும் கடைபிடிக்கப்பட்டு வரும். மேலும் தினமும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும், மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்பாகவும் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் நன்மையை ஏற்படுத்தும்.

இவ்வாறு வழிபடுவதற்கு ஒரு சில முறைகள் உள்ளன என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு சில விஷயங்களை பூஜை அறையில் விளக்கேற்றிய பின்பு செய்யக்கூடாது என்பதை குறித்தும் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வீட்டில் விளக்கேற்றிய பின்பு தலை குளிப்பது, துணி துவைப்பது, ஈரத் துணியை காய வைப்பது கூடாது.

Pooja room

மேலும் விளக்கேற்றிய நேரத்தில் அரிசி, பருப்பு, பணம் போன்றவற்றை யாருக்கும் தானமாகவோ, கடனாகவோ கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. விளக்கில் எண்ணெய் இல்லாமலோ, அல்லது வேறு எதுவும் காரணங்களினாலோ விளக்கு தானாக அனைய விடக்கூடாது. விளக்கை அணைக்கும் நேரத்தில் புஷ்பத்தை வைத்து அலை மோதாமல் மெதுவாக அணைக்க வேண்டும். இவ்வாறு ஒரு சில வழிமுறைகளை செய்வதன் மூலம் வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்று நம்பப்பட்டு வருகிறது.