அவிட்டம் நட்சத்திரத்தில் ஒன்றைரை ஆண்டு சஞ்சரிக்கும் ராகு! செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள்தான்...!!!
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு ஒரு ராசியில் சுமார் 1½ ஆண்டுகள் சஞ்சரிப்பதுடன், எப்போதும் பின்னோக்கி நகரும் வக்ர இயக்கத்தைக் கொண்டதாக ஜோதிடம் கூறுகிறது.
தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் ராகு, ஆகஸ்ட் 1ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைந்தார். அக்டோபர் 3ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தின் 3ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் ராகு, டிசம்பர் 5ஆம் தேதி வரை அங்கு தொடர உள்ளார். இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இழந்த செல்வத்தை மீண்டும் பெற.. புரட்டாசி சனிக்கிழமை விரதம்.. கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
மேஷம்: தொழில், பணவரவில் முன்னேற்றம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. புதிய யோசனைகளை செயல்படுத்தும் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த சவால்கள் படிப்படியாக குறைந்து, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
நிதி நிலை மேம்படுவதற்கான சூழல் அமையும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். உடல்நிலையிலும் பெரிய பிரச்சினைகள் இல்லாமல், புதிய தொடக்கங்கள் மேற்கொள்ள ஏற்ற காலமாக அமையும் என ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது.
சிம்மம்: பதவி உயர்வு, வணிகத்தில் லாபம்
சிம்ம ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். தன்னம்பிக்கை அதிகரித்து, நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வேலை தொடர்பாக புதிய முன்னேற்றங்கள் ஏற்படுவதுடன், உயர்ந்த பதவிகளை அடையும் வாய்ப்பும் உருவாகலாம். வணிகத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கலாம். பணவரவு சீராகி, சேமிப்பு வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஜோதிட பலன்கள் தெரிவிக்கின்றன. உடல்நலத்திலும் சாதகமான நிலை காணப்படும் என்று கூறப்படுகிறது.
கும்பம்: நிதிச் சிக்கல்கள் குறையும்
ராகு சஞ்சரிக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்த காலம் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதிச் சிக்கல்கள் குறைந்து, பொருளாதார நிலை சீராகும் வாய்ப்பு உள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்த்த சில ஆசைகள் நிறைவேறலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் செயல்திறன் அதிகரித்து, மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும் சூழலும் உருவாகலாம்.
திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர புரிதலும் அதிகரிக்கலாம். குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. அவிட்டம் நட்சத்திரத்தில் ராகுவின் சஞ்சாரம் டிசம்பர் 5ஆம் தேதி வரை நீடிப்பதால், இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளும் முக்கிய முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? ஆன்மீக ரீதியாக சொல்லப்படும் முக்கிய காரணங்கள் என்ன?